தமிழகத்தில் திரையரங்கு திறப்பு இப்போதைக்கு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு திரையரங்குகளை திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு இவ்வாறு தெரிவித்துள்ளார். திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். ODT-யில் திரைப்படம் வெளியீடுவது மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று என்று அவர் தெரிவித்தார். கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வருகிற 15-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி 50% இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் சமூக இடைவெளி ஆகியவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு உள்ளே உணவு மற்றும் நொறுக்கு தீனி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.