Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவன்,மனைவி தகராறு… மனைவி எடுத்த விபரீத முடிவு… இறுதியில் நடந்த சோகம்…!!!

காவேரிப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவேரி பாகத்தை அடுத்துள்ள தட்சம் பட்டறை பஜனை கோவில் தெருவில் 45 வயதுடைய விவசாயி அழி மற்றும் அவரின் மனைவி 40 வயதுடைய காமாட்சி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், ஹரி மற்றும் காமாட்சி ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறு முற்றியதால், அதில் மிகுந்த மனமுடைந்த காமாட்சி விவசாய நிலத்திற்கு வீட்டில் வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டார்.

அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |