Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே அடிமை தான்…. ட்விட் போட்ட உதய்…. கடுப்பில் அதிமுகவினர் …!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நாளை அறிவிக்க இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் ட்விட் போட்டு கடுப்பேத்தியுள்ளார்.

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு தற்போது ஓய்ந்துள்ளது. அதுவும் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே சமாதானம் ஒருவழியாக நடந்துவிட்டதாக பேச்சு அடிபட்டு வருவது தான் இந்த ஓய்வுக்கு காரணம். நாளை அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து என மூன்று ட்வீட் போட்டு அதிமுகவினரை கடுப்பேத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், வேளாண் மசோதா, எட்டு வழிச்சாலை, ஸ்டைர்லைட் துப்பாக்கி சூடு, நீட் விலக்கு நாடகம்… இப்படி இந்த ஆட்சியை தக்கவைக்க நான்தான் அதிகம் உழைக்கிறேன்’- இது ஒருவர். ‘குடியுரிமை திருத்தச்சட்டம், இந்தி திணிப்பு. இருந்தும் ஆட்சிக்காக அவரைவிட நானே சிறந்த அடிமையாக இருக்கேன்’- இது இன்னொருவர்.

அடிமைகள் தூது நடக்கிறது. ‘நீங்க அவர்னு இல்லை. நாம எல்லாருமே அடிமை என்பதால்தான் ஆட்சி ஓடிட்டு இருக்கு. சேகர் ரெட்டி, கன்டெயினர் லாரி, குட்கா டைரி, ஆர்.கே நகர் ரெய்டு, பொள்ளாச்சி கேஸ், கொடநாடு கொலை, பி.எம். கிசான் ஊழல்… பதிலுக்கு இப்படி அவர்களும் அன்பளிப்பு அளிக்கிறார்கள்.

‘இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ யாரும் தயாரில்லை. மிச்சமிருக்கும் மாதத்தையும் கமிஷன் கலெக்ஷனு ஓட்டிடுவோம்.’ இப்படியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தள்ளது. இதில் கொரோனாதான் பாவம். கடந்த சில நாட்களாக அது மக்களை தீண்டும் வேகம் அதிகரித்தாலும் அதை சீண்டத்தான் யாருமில்லை.

Categories

Tech |