சித்தி சித்தப்பா வேலைக்கு சென்று விட சகோதரிகளுக்கு சகோதரர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிக்கும் தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகளும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இத்தம்பதியினர் வேலைக்கு செல்லும் போதெல்லாம் வீட்டின் அருகே வசித்து வரும் குழந்தைகளின் பெரியப்பாவின் வீட்டில் இரண்டு மகள்களையும் விட்டுச் சென்றுள்ளனர். குழந்தைகளின் பெரியப்பாவிற்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் இரட்டை சகோதரர்கள். சிறுமிகளை பெரியப்பாவின் வீட்டில் விட்டுச் சென்றதும் இரட்டை சகோதரர்கள் அவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளனர்.
இது வெகு நாட்களாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் ஒருநாள் சிறுமியின் தாய் இரண்டு மகள்களும் சோர்ந்து இருப்பதைப் பார்த்து சந்தேகம் கொண்டு விசாரித்துள்ளார். அப்போது இருவரும் பெரியப்பாவின் வீட்டில் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் இரட்டை சகோதரர்களான சிஹாப் மற்றும் சாய்ஃபுதின் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.