தமிழ்மொழி படித்தவர்களுக்கு வாய்ப்பை மறுப்பதா? என மத்திய அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்மொழி கல்விக் கொள்கை வாயிலாக ஹிந்தி மொழி தமிழகம், கன்னடம் உள்ளிட்ட மாநிலங்களில் திணிக்கப்படுவதாக மக்கள் பலர் நூதன முறைகளில் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அதேபோல், தமிழகத்திலும் அரசு வேலை உட்பட பலவற்றில் தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும், வட மாநிலத்தவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு சிறந்த உதாரணமாக,
கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ரயில்வே துறை தேர்வுகளில் வட மாநிலத்தவர்களே அதிகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான தகுதி அறிக்கையை மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.அதில், தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித்தகுதியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக, எம்பி சு.வெங்கடேசன்” செம்மொழியான தமிழ் படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா?” என மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.