கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஈரான் – அமெரிக்கா இடையே போர் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் கடந்த ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் போர்படை தளபதி ஹாஷிம் சுலைமானியை அமெரிக்க ஏவுகணை தாக்குதல் மூலம் கொன்றது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் ராணுவம் ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவ படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவ்வப்போது மாறி மாறி இரண்டு நாடுகளுக்கும் இடையே கண்டனங்கள், எச்சரிக்கைகள், மிரட்டல்கள் தொடர்ந்து வந்த நிலையில், அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதித்தது. இதனால் கடுமையான பொருளாதார சந்தித்து பொருளாதாரச் சரிவை சந்தித்த ஈரான் தற்போது வரை அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது, ஈரான் நாட்டின் புரட்சித்தலைவர் ஹாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டும் காரணம் அல்ல… ஒட்டுமொத்த அமெரிக்காவும் தான் காரணம். இந்த தாக்குதல் ஒரு கோழைத்தனமான தாக்குதல், இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.