தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் தேமுதிக தலைமையிடம் அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனோ தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவரது மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் கொரோனோ தொற்றிற்க்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கடந்த 2-ஆம் தேதி இருவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது மீண்டும் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.ஆனால் தேமுதிக தலைமையிடம் இதனை மறுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார் எனவும் தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.