தமிழகத்தில் நேற்று மேலும் 71 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 9917 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,36,408 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோணா பரவல் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 1306 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 548 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 75 ஆயிரத்து 212 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 434 பேருக்கும், சேலத்தில் 326 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 263 பேருக்கும், கொரோனா ஏற்பட்டுள்ளது.