அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து தன்மை யாரும் நீக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்திருப்பது அந்தக் கட்சியில் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இன்று அருவிக்கவுள்ள நிலையில் அவைத்தலைவர் பதவிலிருந்து மதுசூதனன் நீக்கப்பட உள்ளதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவரிடம் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவைத் தலைவர் பதவி தமக்கு ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்டது என்றும், அதனை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்ட சர்ச்சையால் அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது. இதற்குத் தீர்வாக இன்று இந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். இதனிடையே அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் இன்று நீக்கப்பட உள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஆனால் அவை தலைவர் பதவியில் இருந்து தம்மை யாராலும் நீக்க முடியாது என்று மதுசூதனன் திட்டவட்டமாக அறிவித்து இருப்பதால் அதிமுகவில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.