பஞ்சாபில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அந்தப் போராட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் பால்பீர் சிங் சித்து ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், நேற்று ஹரியானா மாநிலத்தில் போராட்டத்தை தொடர சென்றுள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவள் தன்னைத் தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.