Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசியும் அதிகம்….செய்வதும் எளிது….நெல்லிக்காய் துவையல்…!!

நெல்லிக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:

முழு நெல்லிக்காய் – 5
காய்ந்த மிளகாய்    – 2
பச்சை மிளகாய்       – 2
பெருங்காயத்தூள்   – 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல்   – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு     – ஒரு டீஸ்பூன்
உப்பு                                – தேவையான அளவு

செய்முறை:

5 முழு நெல்லிக்காயை எடுத்து கொள்ளவும். அதை கடாயில் லேசாக வேகவைத்து கொட்டை நீக்கி வைக்கவும்.

பின்னர் மிக்ஸி ஜாரை எடுத்து, அதில் காய்ந்த மிளகாய் 2, பச்சை மிளகாய் 2, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

இறுதியாக வேக வைத்த நெல்லிக்காய் மற்றும் உப்பு (தேவைக்கேற்ப) சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான நெல்லிக்காய் துவையல் ரெடி.

Categories

Tech |