Categories
உலக செய்திகள்

துண்டுதுண்டாக வெட்டி…. எரிக்கப்பட்ட காதலி…. காதலன் வெறிச்செயல்…. அதிரவைக்கும் பின்னணி …!!

காதலியை காதலன் கொன்று துண்டு துண்டாக வெட்டி மாமிசத்தை எரிப்பது போல் எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டைச் சேர்ந்த பினார்  என்பவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வந்தவர். இதனால் பலருக்கும் அறிமுகமான இவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரைத் தேடி வந்த அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பினாரின் காதலர் மற்றும் அவரது சகோதரர் மெர்ட்கன் அவ்சி ஆகிய இருவரது தொலைபேசி உரையாடல்களையும் கவனித்து வந்தனர். அதன் பிறகு மெர்ட்கன் அவ்சியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது சில தகவல்களை கூறியுள்ளார்.

அதில் பினார் காணாமல் போன போது தனது சகோதரர் செமல் மெடின் அவ்சி துண்டாக நறுக்கப்பட்ட மாமிசத் துண்டுகளை எரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற நான் கெட்ட வாடை வருவதாக கூறி விசாரித்தேன். அதற்கு கெட்டுப்போன மாமிசங்களை எரிப்பதாக பதிலளித்தார். எனது சகோதரரின் மதுபான விடுதியில் இருந்த குளிர்சாதனப்பெட்டி சேதமடைந்ததால் மாமிசம் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இதனால் எனது சகோதரர் கூறியதில் எந்த சந்தேகமும் வரவில்லை என கூறியுள்ளார்.

இதனிடையே செமல் மெடின் அவ்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பெண்களுக்காக குரல் கொடுத்து வந்த பினார் கொலை செய்யப்பட்டது குறித்து தொடர்ந்து சகோதரர்களிடம் விசாரணை நடந்து வருகின்றது. துருக்கியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 77 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். அதோடு 23 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |