Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிரிகளின் எண்ணத்தில் மண் விழுந்தது… அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேச்சு…!!!

அதிமுகவில் பிரச்சனை வெடிக்காதா  என எதிர்பார்த்திருந்தவர்களின் எண்ணத்தில் மண் விழுந்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணி அளவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்கள் யார்? என்ற சர்ச்சைகான  விடை கிடைத்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழிகாட்டுதல் குழுவின் பெயர்களை அறிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மறைந்த முதல்வர்களான அறிஞர் அண்ணா ,எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை  மேற்கோள்காட்டி பேசினார்.

மேலும் கட்சிக்காக உண்மையாக உழைத்தால் சாமானியர்களும் கட்சியின் தலைமை பொறுப்பை வகிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அதிமுக விளங்குகின்றது என்று புகழாரம் சூட்டினார்.அதனையடுத்து முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன் என்று கூறினார். இதன் மூலம் அதிமுகவில் இதுவரை நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் எப்பொழுது குழப்பம் ஏற்படும் என்று எண்ணியவர்களின் எண்ணத்தில் நாங்கள் மண்ணைத் தூவி உள்ளோம் என்று கூறினார்.மேலும் அதிமுகவில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்துடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளோம் எனவும்  வருகின்ற 2021 ஆம் ஆண்டில் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். வழிகாட்டுதல் குழுவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் பெயர்கள் குறைவாக உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மறுப்பை தெரிவித்த ஜெயக்குமார் குழுக்களில்  உள்ள பெயர்கள் ஒருமித்த கருத்துடன் அறிவிக்கப்பட்டவை  என்றும்  பதிலளித்தார்.

Categories

Tech |