அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதலமைச்சர் அவர்களை இன்று மாலை அவரது வீட்டில் சந்திக்க உள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவும்,அதிமுகவின் சட்டமன்ற தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ் பி வேலுமணி ,ஜெயக்குமார்,சி வி சண்முகம், காமராஜ், ஜே சி டி பிரபாகர், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் அடங்கிய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை அறிவித்தார்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன் என்று கூறினார். அதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் மரியாதை செய்தார். பின்பு இருவரும் ஒன்றாக இணைந்து எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மாலை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக சற்று முன் தெரிவித்துள்ளார்.