Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடி – சீனா அதிபர் ஜின்பிங் சந்திப்பு

இந்தியா சீனா எல்லை பிரச்சினைகிடையே  பிரதமர் திரு. மோடியும் சீன அதிபர் ஜீ. ஜின்பிங்கும் அடுத்த மாதம் 17-ஆம் தேதி மெய்நிகர் காட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு வரும் நவம்பர் 17-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பிரதமர் திரு.மோடி சீன அதிபர் ஜீ. ஜின்பிங்கும் கலந்து கொண்ட இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொரானா பரவல் காரணமாக  இந்த ஆண்டு மாநாடு காணொளி மூலம் நடைபெறுவதால் தலைவர்களின் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு தவிர்க்கப்படுகிறது.

ஆனால் பிரதமர் திரு மோடி சீன அதிபர் ஜீ. ஜின்பிங்கும் மெய்நிகர் காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக்கில்  இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் எல்லைப் பிரச்சினை இருநாட்டு உறவுகள் போன்றவை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

Categories

Tech |