மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 132 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு நாள்தோறும் அதிக அளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 132 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த போலீஸ் எண்ணிக்கை 24,386 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 4 போலீசார் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்த போலீஸ் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது.தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21,593 காவலர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2,536 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில காவல்துறை கூறியுள்ளது.