Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நெல்லை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை மிரட்டும் ஊழியர்கள் …!!

நாகை மாவட்டம் வழுவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நெல்லை கொள்முதல் செய்வதற்காக 149 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வலுவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்யாததை கண்டித்து மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் விதிகளில் நெல் மூட்டைகளை அடுக்கி முளைத்த நெல்மணிகளை கீழே கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

இதன் இடையே குண்டத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை ஊழியர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இது குறித்து நாகப்பட்டினம் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் இடம் முறையிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |