Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்‍கு – காவலர் முருகன் ஜாமின் மனு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முருகன் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் செயராஜ் வென்னிக்ஸ் கொலை வழக்கில் காவலர் முருகன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூன்றாவது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கில் ஆவணங்களை தடைய  அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்த நிலையில் விசாரணை முடிவடைந்து உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் திரு.இளந்திரை முன்பு இன்று விசாரணைக்கு வந்ததது. அப்போது  இது குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Categories

Tech |