மகரம் ராசி அன்பர்களே..!
இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளல்ல. புத்திசாலித்தனமாக செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை நீங்கள் சாதகமாக்கிக் கொள்ளலாம்.
பணிச்சார்ந்த பயணங்களுக்கு இன்று சாத்தியமுண்டு. இன்று உங்களின் பணிகளை முறையாக திட்டமிடுவது முக்கியம். இன்று உங்களின் பிரியமானவர்களுடன் உங்களின் உறவை பராமரிக்க விரும்பினாலும் சில சமயத்தில் மனநிலையை இழப்பீர்கள். இன்று பணவிஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு எந்தவித முடிவையும் எடுத்துவிட வேண்டாம். இன்று உங்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்காது. தலைவலி போன்ற பாதிப்புக்கு ஆளாவீர்கள். மனதை ஓய்வாக வைத்திருங்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனமறிந்து செயல்படுவது நல்லது. நீங்கள் காலபைரவர் வழிபாடு செய்வது நல்லப் பலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.