சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூபாய் 2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ,சிறுதாவூர் பங்களா போன்றவற்றை வருமான வரித்துறை முடங்கியுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர்.இச்சோதனையின் மூலம் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூபாய் 2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இவர்கள் சிறையிலிருந்து வருகிற ஜனவரி மாதம் வெளியே வர வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சொத்துக்களை முடக்கி உள்ளது வருமானவரித்துறை. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும் போது சசிகலா வெளியே வந்தால் அதிமுக தலைமையை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பார் எனவும் அதை முடிக்கவே சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன எனவும் கூறுகின்றனர்.