Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட சிறுநீரகம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகம் பொருத்துவதற்காக, விபத்தில் பலியான இளைஞரின் சிறுநீரகம் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சுமார் மூன்றரை மணி நேரத்தில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் விபத்து ஒன்றில் பலியானார். இவரது சிறுநீரகத்தை தானம் செய்ய அவரது உறவினர்கள் விரும்பினர். இன்னிலையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வெங்கடேஷ் என்பவருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. மதுரையில் இருந்து  வழிநெடுகிலும் உள்ள போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனை வந்தடைந்தது.

Categories

Tech |