வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ரேஷன் ஊழியர்கள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்படாததால் அதிருப்தி.
திண்டுக்கல்லில் நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்கள் சரிவர செயல்படாததால் வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ஊழியர்கள் பயோமெட்ரிக் இயந்திரங்களை திருப்பி ஒப்படைத்தனர். குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் விஜயலக்ஷ்மி உறுதி அளித்ததால் நியாய விலை கடை ஊழியர்கள் கலைந்து சென்றனர்.