சிவகங்கையில் திமுகவை சேர்ந்த 10071 பேர் மாநில தலைவர் டாக்டர் L.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வர இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்துக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை திமுக – அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் போட்டி இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி கடந்த சில நாட்களாக தனக்கான இடத்தை வலுப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அதன் நடவடிக்கைகளும் அதை சார்ந்தே இருக்கின்றன.
தனித்து போட்டியிடும் பலம் தன்னிடம் இருப்பதாகவும், நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் 60 இடங்களில் வெற்றி கொள்வோம் என்றெல்லாம் பாஜக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றன. அதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று திமுகவைச் சேர்ந்த 10 ஆயிரத்து 71 பேர் பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.
திமுக இணையம் மூலமாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி கொண்டிருக்கும் நிலையில் பாஜகவும் திமுகவிற்கு டாப் கொடுக்கும் வகையில் திமுக தொண்டர் அதிகமானோரை பாஜகவில் இணைத்துள்ளது. பாஜகவின் இந்த அதிரடி அரசியலை கண்டு திமுக உறுப்பினர்கள் நடுங்கியுள்ளனர்.
இன்று சிவகங்கையில் திமுகவை சேர்ந்த 10071 பேர் மாநில தலைவர் டாக்டர் L.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் தேசிய செயலாளர் H.ராஜா மற்றும் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தனர்
@Murugan_TNBJP@HRajaBJP @NainarBJP @blsanthosh pic.twitter.com/2AsgVMQUEV
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 7, 2020