மரபணு மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த ஆண்டுக்கான வேதியியல் துறை நோபல் பரிசு இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த ஐந்தாம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவம் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. மரபணு செயல்களை துண்டித்து மீண்டும் சேர்ப்பது தொடர்பான ஆராய்ச்சிக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இம்மானுவேல் சார்பன்டர், பிரான்சை சேர்ந்த ஜெனிஃபர் டவுட்னா என 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் மயில்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.