Categories
அரசியல் மாநில செய்திகள்

விரட்டி அடிக்கனும்…! ஜீரோவான திமுக….. ஹீரோவான பாஜக…. எச்.ராஜா ஆவேசம் …!!

திமுகவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கையில் திமுகவை சேர்ந்த மேபல் சக்திநாதன் அக்கட்சியில் இருந்து விலகி 10,071பேருடன் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய எச்.ராஜா, ஒரு மாதத்திற்கு முன்பு  200பேர் 25, 25 பேருடன் 200 பேர் பாஜகவில் இணைந்த பட்டியலுடன் திமுக மேபல் சக்திநாதன் இணைந்தார். அதை சில ஊடகத்தில் 200 பேர் சேர்ந்தார்கள் என்று சொல்லிவிட்டார்கள். ஒரு பத்திரிக்கை 2,000 பேர் என்று எழுதி இருந்தது.

உடனே என்னுடைய அருமை நண்பர் பெரியகருப்பன் சொன்னார்… சைபர் போடுகின்றது எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்கலாம். இதில் சைவர் போட்டுக்கிற பிரச்சனையே கிடையாது. இனிமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 0 ஆக இருக்கலாம். 10 ஆயிரத்து 71 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கம்பியூட்டரில் ஏற்றிய ஆதாரத்தோடு மேபல் சக்திநாதன் மாநிலத் தலைவர் கையில் கொடுத்து உள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அஸ்தமனம் சிவகங்கையில் இருந்து துவங்கி இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். நாமெல்லாம் மதவாதிகள் என்று சொல்லிக் தயங்க வேண்டாம். மதத்திலேயே நம்பிக்கை இருப்பவர்கள் மதவாதிகள். இதனை என்னைக்குமே சொல்வதற்கு தயங்கியது கிடையாது.

ஆனால் திக, திமுக இயக்கமும், கம்யூனிஸ்டுகளும் இறை நம்பிக்கைக்கு விரோதிகள். எல்லா மதத்தினரும் அவர்களை பொது வாழ்க்கையிலிருந்து அடித்து துரத்தி அப்புறப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று எச்.ராஜா பேசினார்.

Categories

Tech |