Categories
அரசியல் மாநில செய்திகள்

வடக்குக்கு வால் பிடிக்கும் அடிமை அரசு…. எடுபிடிகளின் புறக்கணிப்பு…. உதயநிதி ஆவேசம் …!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது கண்டித்து திமுக இளைஞரணி – மாணவரணி போராட்டம் நடத்தும் என  எச்சரிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாணவரணி செயலாளர் எழிலரசன் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் அடிமை அதிமுக அரசே..! ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு வைத்து கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மாணவர்களின் வேலைவாய்ப்பை தடுப்பதா ? தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்வு நடந்துக..! அல்லது கழகத் தலைவர் அவர்களின் ஆணைப்படி திமுக இளைஞரணி – மாணவரணி இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கும். கடந்த ஐந்தாம் தேதி அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பல்வேறு பதவிக்கு ( துணை பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கான தேர்வு முதலில் எழுத்துத் தேர்வு,பின்னர் நேர்முகத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எழுத்து தேர்வானது ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்றும், அதுவும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்றும் இந்த வேலைவாய்ப்பு அறிக்கை தெரிவிக்கின்றது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால் ஆள்சேர்ப்புக்கு  நடத்தும் தேர்வில் மட்டும் தமிழ் இருக்காதா ? இந்த அதிமுக அரசு தொடர்ச்சியாக தமிழை ஒதுக்கித் தள்ளுவது தனது அறிக்கை வாயிலாக மக்களுக்கு தெரிவித்து இருந்தார் கழக தலைவர்.  அதுமட்டுமா ? தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்டம் – 2016 தமிழ்நாடு அரசின் வேலைகளுக்கு  விண்ணப்பிப்பவர்களுக்கு உறுதியாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்று அறுதியிட்டு கூறி இருக்கும் சூழலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் மட்டும் வைப்பதென்பது தமிழ் மொழியை தமிழகத்தில் இல்லாமல் ஆக்குவதற்கு செயல் அன்றி வேறு ஒன்றும் இல்லை.

அது மட்டுமல்லாமல் தமிழ் வழிக் கல்வி சட்டம் 2010 இல் தமிழ்நாடு அரசு வேலைகளில் 20 செய்த வேலையை தமிழ்மொழி கற்றவர்களுக்கு மட்டுமே தரவேண்டும் என்று சொல்கிறது. இந்தச் சட்டத்தின் படி பார்த்தால் நுழைவுத் தேர்வை தமிழிலும், ஆங்கிலத்திலும் வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துத் தேர்வு தேர்வு வைப்பேன் என்று அறிவித்திருப்பது தமிழகத்தில் தமிழை இல்லாமல் ஆக்குவதும் செயல் அன்றி, வேறு எதுவும் இல்லை.

இதோடு மட்டுமே இந்த கொடுமை, தேர்வுக்கான பாடத் திட்டத்திலும் தமிழ் பாடங்கள் ஏதும் இடம்பெறவில்லை. உதாரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பாடத்திட்டம் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் இடம்பெறும். ஆனால் இந்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தேர்வு எழுத்துத் தேர்வில் தமிழ்ப் பாடத் திட்டமும் இல்லை. அடிமை அரசுக்கு தமிழ் மொழியையும், மாநில உரிமையையும் கண்டாலே எட்டிக் காயாய் கசப்பதே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய எழுத்து தேர்வில் இருந்து தமிழ்மொழி மற்றும் தமிழ் பாடப்பிரிவுகள் நீக்கத்திற்கு காரணம்.

தமிழகத்தில் ஆங்கிலத்தில் தேர்வு வைப்பதன் மூலம் தமிழ் வழியில் மட்டுமே கல்வி கற்கும் மாணவர்களில்… முக்கியமாக கிராமப்புற மாணவர்கள், படித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வேலை வாய்ப்பை எதிர்காலத்தை கெடுக்க முயற்சிக்கிறது அதிமுக அரசு. இதுவரை தயங்கி தயங்கி தமிழை அழித்துக் கொண்டிருந்த அடிமை அரசு தற்போது முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று முற்றுமுதலாக தமிழை வேலை வாய்ப்பில் இல்லாமல் ஆக்கி, தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் வேலையில் அதிமுக ஈடுபட்டு வருவது இதன் மூலம் தெளிவாகிறது.

ஏற்கனவே தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு முழுவதையும் வடமாநிலத்தவர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும், வேளையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் தமிழர்களை இல்லாமல் ஆக்குவதற்கான வேலையைத்தான் நுழைவுத் தேர்வில் தமிழ் இல்லாமல் செய்யும் இந்த முயற்சி என்று அதிமுக அரசை திமுக இளைஞரணி – மாணவரணி குற்றம் சாட்டுகிறது. எனவே உடனடியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தேர்வுகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்பட வேண்டும் என்றும், பாடத்திட்டத்தில் தமிழ் பாட கேள்விகளை வைத்து நடத்த வேண்டும் அல்லது திமுக இளைஞரணி – மாணவரணி கழகத் தலைவர் அவர்களின் அனுமதி பெற்று தமிழகமெங்கும் போராட்டம் நடக்கும் என்று எச்சரிக்கின்றோம் களத்தில் சந்திப்போம் என்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |