பருவக் காய்ச்சலுடன் கொரோனா தொற்றை அதிபர் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதன் பிறகு தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆரம்ப கட்டத்தில் கொரோனாவை எப்படி சாதாரணமாக மதிப்பிட்டாரோ அதேபோன்று இப்போதும் கொரோனாவை பருவ காய்ச்சலுடன் ஒப்பீட்டு பேசியுள்ளார். அவர் பதிவில் “ஒவ்வொரு வருடமும் பருவ காய்ச்சல் உயிரிழப்புகளை எடுக்கிறது. தடுப்புமருந்து இருந்தாலும் ஒரு லட்சத்தை தாண்டி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால் நாட்டு நிர்வாகத்தை நாம் மூடிவிட முடியாது.
மற்ற வைரஸ்களுடன் இணைந்து வாழ்வதற்கு கற்றுக்கொண்டது போல் கொரோனாவுடன் இணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஏராளமான மக்களுக்கு தொற்று பரவி இருந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவு தான்” என குறிப்பிட்டு இருந்தார். உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்றினால் அச்சத்தில் இருக்கும் நிலையில் அதிபர் பதிவு கொரோனா கால விதிமுறைகளை மீறியது என்று ஃபேஸ்புக் நிறுவனம் அவரது பதிவை நீக்கியுள்ளது. அதேபோன்று ட்விட்டர் நிறுவனமும் எச்சரிக்கை வாசகங்கள் அனுப்பி வைத்து ட்ரம்பின் பதிவை மறைத்துள்ளது.