Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

டீயுடன் சேர்த்து சாப்பிட…மொறுமொறுவென காலிஃபிளவர் பஜ்ஜி…!!

காலிஃபிளவர் பஜ்ஜி செய்ய தேவையான பொருள்கள்:

காலிஃபிளவர்                 – அரை கிலோ
மிளகாய்தூள்                 – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்                    – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய்          – 2
பூண்டு                               – இரண்டு பல்
எண்ணெய்                     – தேவையான அளவு
கடலை மாவு                  – ஒன்றரை கப்
அரிசி மாவு                     – அரை கப்
கொத்தமல்லி தலை  – சிறிதளவு
சோடா உப்பு                 – ஒரு சிட்டிகை
உப்பு                                  – தேவையான அளவு
மிளகுத்தூள்                   – கால் டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் நறுக்கிய அரை கிலோ காலிஃபிளவர், ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் மிக்ஸி ஜாரில் 2 பச்சை மிளகாய், கொத்தமல்லி தலை, பூண்டு 2 பல் சேர்த்து நன்கு அறைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு 1 1/2 கப், அரிசி மாவு 1/2 கப், மிளகாய் தூள் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், மிளகுத்தூள்1/4 டீஸ்பூன், அரைத்த மசாலாவை போட்டு, சோடா உப்பு, உப்பு(தேவைக்கேற்ப), தண்ணீர் (தேவையான அளவு) ஊற்றி நன்கு கலக்கி பஜ்ஜி மாவு பதத்திற்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் காலிஃபிளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, நாம் ஏற்கனவே கலக்கி வைத்திருக்கும் பஜ்ஜி மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் காலிஃபிளவர் பஜ்ஜி ரெடி.

Categories

Tech |