Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஒரே நாளில் 10,606 பேருக்கு கொரோனா தொற்று…!!

கேரளாவில் இதுவரை  இல்லாத அளவாக  ஒரே நாளில் 10 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய  மாநிலமாக கேரளா மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு  கே.ஜே சைலஜா அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே கேரளாவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 92 ஆயிரத்து 161 நபர்கள் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொரு அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 34 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |