Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதும் விவாதம்… கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் மோதல்… சூடுபிடிக்கும் பேச்சு…!!!

அமெரிக்க துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் மைக் பென்ஸ் ஆகியோருக்கு இடையே நேருக்கு நேர் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அதில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் இருவருக்குமிடையே நேருக்கு நேர் விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்ற கமலா ஹாரிஸ் மற்றும் மைக் பென்ஸ் ஆகியோருக்கு இடையே இன்று நேருக்கு நேர் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

அந்த விவாதத்தில் பேசிய மைக் பென்ஸ் கூறுகையில், “நாம் அனைவரும் கொரோனா என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகின்றோம்.அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் கொரோனா உயிரிழப்புகள் சற்று குறைந்துள்ளன. நாட்டின் பாதுகாப்பு மட்டுமே டிரம்புக்கு முதன்மையானது. அது மட்டுமன்றி ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம். ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் வரி சலுகைகளை முற்றிலும் பறித்து விடுவார்”என்று அவர் கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ் கூறும்போது, “டிரம்ப் அரசிடம் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு சரியான செயல் திட்டம் எதுவும் கிடையாது. அவரின் தோல்வியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாடு முழுவதிலும் 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ட்ரம்ப் அரசின் மிக மோசமான முடிவுகளால் பொருளாதாரம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வருகின்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருக்கிறது”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |