பஞ்சாபி சன்னா மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி – 2
நெய் – 4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி தலை – மேலே அலங்கரிக்க சிறிது
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – 4 டீஸ்பூன்
செய்முறை:
வெள்ளை கொண்டைக் கடலையை இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் குக்கரை எடுத்து, அதில் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், மிளகாய்தூள் கால் டீஸ்பூன், நறுக்கிய 5 பல் பூண்டையும் சேர்த்து நான்கு விசில் விட்டு இறக்கவும்.
வாணலியில், 4 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, அதில் தட்டிய பூண்டு, அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதனுடன் சீரகம், 3 பச்சை மிளகாய், உப்பு, அரைத்த தக்காளி, குக்கரில் வேக வைத்த கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், கரம் மசாலா தூள், கொத்தமல்லி தலை தூவி இறக்கவும். அவ்ளோதான் சன்னா மசாலா ரெசிபி ரெடி.