Categories
உலக செய்திகள்

துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் – மைக் பென்ஸ் விவாதம்

கொரோனாவை எதிர்கொண்டது டொனால்ட் ட்ரம்ப் அரசுக்கு ஏற்பட்ட தோல்வியை அமெரிக்க மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற உள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ. பித்தன் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையே இன்று நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. அமெரிக்காவில் சால்ஸ் லேக்கல் இருக்கும் உட்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விவாதத்தில் கொரோனா என்ற மிகப்பெரிய சவாலை எதிர்க்கொண்டு பல லட்சம் உயிர்களை காப்பாற்றி உள்ளதாக மைக் பென்ஸ் கூறினார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கமலா ஹாரிஸ் அதே கொரோனாவை கையாண்ட விதத்தில் டிரம்ப் அரசு தோல்வி அடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 70 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குற்றம் சாட்டினார். டிரம்ப் அரசு இந்த தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் எனவும் கமலா ஹாரிஸ் அப்போது விமர்சித்தார்.

Categories

Tech |