பண்டிகை காலம் வரவிருப்பதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.
நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு கொரோனாவை கண்டறியும் சோதனைகளும் அதிகரிக்கபட்டுள்ளனர். எனினும் கொரோனா பரவல் குறையவில்லை இந்நிலையில் விரைவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜென் அட்டோலன் என்ற மக்கள் இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.
டுவிட்டரில் விழிப்புணர்வுக் கருத்துகளை பதிவிட்டு மக்கள் இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். சமூக வலைத்தளங்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை கண்டறியும் வரை மக்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கை உரைகளை அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பிரசாரத்தில் வலியுறுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.