Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சம்பவம்: உ.பி. பா.ஜ.க. தலைவருக்கு நோட்டீஸ்…!!

உத்திரபிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்ணை  பற்றி தரக்குறைவாக விமர்சித்த பாரதிய ஜனதா தலைவருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம் பெண்ணை நான்கு நபர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சித்திரவதை செய்து கொலை செய்து கொடூரத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த  இளம்பெண் யார் என்ற விவரத்தை ட்விட்டரில் வெளியிட்ட பாஜகவின் தகவல் தொழில்நுட்ப தலைவர் அமித் மால்வியாவிற்கு   தேசிய மகளிர் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சி  தலைவர் ரஞ்சித் ஸ்ரீ வத்ஸவாருக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்காக 26ம் தேதி காலை 11 மணிக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் முன் அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணை பற்றி அரசியல் தலைவர் ஒருவர் தரக்குறைவாக விமர்சித்தது கடும் கண்டனத்திற்குரியது. இவர் அரசியல் கட்சி  தலைவர் என்பதற்கே தகுதியற்றவர் என்றும் தேசிய மகளிர் நல ஆணையத்தின் தலைவர் திருமதி ரேகா ஷர்மா வன்மையாக கண்டித்துள்ளார்.

Categories

Tech |