Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சூப்பர் பாஸ்ட் ரயில்… நாளை முதல் பயணிகள் செல்லலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்…!!!

மராட்டிய மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஐந்து சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கம்போல் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்க கூடிய வகையில் தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு முடிவெடுத்துள்ளது. இதுபற்றி மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், “ஊரடங்கு தளர்வுகள் காரணமாக நாளை முதல் சிஎஸ்எம்டி ரயில் நிலையத்திலிருந்து நாக்பூர், புனே, கோண்டியா, சோலாப்பூர் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதில் நாக்பூர் இடையே துரந்தோ சிறப்பு சிறப்பு ரயிலும் மற்ற ரயில் நிலையங்களுக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே சிறப்பு ரயில்களில் பயணம் செய்யலாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு விடுத்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பயணிகள் பயணம் செய்ய வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்”என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |