Categories
தேசிய செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியாவிற்கு ஜாமீன்…!!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய என்சிபி முடிவெடுத்துள்ளது.

இந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் சிபிஐ அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய மத்திய அரசின் மூன்று முக்கிய அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தினர். நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்திய என்சிபி அதிகாரிகள் கடந்த எட்டாம் தேதி அவரை கைது செய்தனர்.

என்சிபி சிறப்பு நீதிமன்றத்தில் நடிகை ரியா தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நடிகை ரியாவின் ஜாமீன் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நீதிபதி திரு சாரன் கொத்துவா நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஒரு மாத காலம் சிறையில் இருந்த நடிகை ரியா சக்கரபோர்த்தி நேற்று மாலை மும்பை பைக்குலா சிறையிலிருந்து வெளிவந்தார்.

Categories

Tech |