அமெரிக்காவில் துணை அதிபருக்கான போட்டியில் களத்திலுள்ள மைக்பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் கிடையே காரசாரமாக நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.
துணை அதிபர் போட்டியில் களத்தில் உள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக்பென்ஸ், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. சால்ட் லேக் சிட்டியில் உள்ள நியூடா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடுவராக USA டுடே பத்திரிகையைச் சேர்ந்த சூசன் பேஜ்கலந்து கொண்டார். சூசன் பேஜ் எழுப்பிய கேள்விகளுக்கு வேட்பாளர்கள் இருவரும் பதில் அளித்தனர். அப்போது கொரோனா பாதிப்பை பற்றி கடந்த ஜனவரி 28-ஆம் தேதியே அதிபரும், துணை அதிபரும் அறிந்ததும் உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைத்தனர் என கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான செயல்பாடுகளை கொண்ட அதிபராக டிரம்ப்பை நாட்டு மக்கள் பார்ப்பதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த மைக்பென்ஸ் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய அதிபர் டிரம்ப் தடை விதித்ததன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றபட்டுள்ளதாக கூறினார்.