Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. ஜானி பாஸ்டோ, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் என வலுவான பேட்டிங் வரிசையும் ரஷீத் காந்த், நடராஜன் உள்ளிட்ட திறமையான பவுலர்களையும் கொண்டுள்ளது ஹைதராபாத் அணி. பஞ்சாப் அணி வீரர்களை நிலைத்து ஆட விடாமல் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினால் போட்டி சன்ரைசர்ஸ் அணிக்கு சாதகமாகும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியில் ராகுலும், மைன் அகர்வாலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் முன்னணி வீரர்களான பூரான், மாஸ் போன்றவர்கள் சோபிக்கவில்லை.

அதேபோல பஞ்சாப் அணியின் பவுலிங்கும் வலுவாகவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. நடப்பு ஐ.பி.எல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 14 முறை ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 10 போட்டிகளில் ஹைதராபாத்தும் 4-ல் பஞ்சாப்பும் வெற்றி கண்டுள்ளனர். கடைசியாக கடந்த ஆண்டில் இரு அணிகளும் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 213 ரன்களை குவித்தது. டேவிட் வார்னர் 82 ரன்கள் குவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |