திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் வசிக்கும் மக்களிடம் வரி மட்டும் பெற்றுக்கொண்டு கழிவுநீர், சாலை வசதி, மேம்பாலம் போன்றவற்றை செய்து தராமல் மாங்கா தோப்பு, ரெட்டி தோப்பு பகுதிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனையொட்டி ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள இளவரசன் என்பவர் நடத்தி வரும் ஸ்வேதா பிரிண்டிங் பிரஸ்ஸில் துண்டு பிரசுரங்களை அச்சடித்து வீடு வீடாக அப்பகுதி மக்கள் வினியோகம் செய்தனர்.
இந்த தகவலறிந்து சென்ற வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி துண்டு பிரசுரம் அட்ஜெட்டர் பிரின்டிங் பிரஸ்க்கு சீல் வைத்தார். இதனைத் தொடர்ந்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு அச்சகம் மாநில துணைத்தலைவர் திரு துரை குமணன் உடனடியாக சீல் வைத்ததை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.