Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை… முடி வெட்டும் கடைகள் கிடையாது… என்ன காரணம் தெரியுமா…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமி பாலியல் வழக்கிற்கு நீதி கேட்கும் வகையில் தமிழகம் முழுவதிலும் நாளை 10 லட்சம் முடி திருத்தும் கடைகள் மூடப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் குரும்பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய வகையிலும்,திறமைக்கு உரிய நிதி கிடைக்கும் வகையிலும் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதிலும் நாளை முடி திருத்தும் கடைகள் மூடப்படுகின்றன.

இந்த கடையடைப்பு போராட்டம் தமிழ்நாடு மருத்துவ நல சங்கம், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் ஆகியோர் சார்பில் நடத்தப்படுகிறது.இதுகுறித்து சங்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ராஜா கூறுகையில், “சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.சங்கத்தின் உறுப்பினர்கள் நடத்தும் கடைகள் மட்டும் அல்லாமல் மற்ற பெரிய கடைகள் அனைத்தும் நாளை மூடப்படுகிறது.

இந்த போராட்டத்திற்கு அந்த கடை உரிமையாளர்கள் சம்மதம் கூறியுள்ளனர். அதனால் நாளை தமிழகம் முழுவதும் அனைத்து முடி திருத்தும் கடைகள் மூடப்பட்டு இருக்கும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லையென்றால் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |