மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகிகள் கொலையை கண்டித்து அக்கட்சியினர் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் அடுத்தடுத்து பாஜாகா நிர்வாகிகள் கொல்லப்படுவதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி காரணம் என்று குற்றம் சாட்டி தலைமை செயலகத்தை நோக்கி பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக கொல்கத்தாவில் பல்வேறு சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்ததால் பல இடங்களில் மோதல் வெடித்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பாரதிய ஜனதா தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கண்ணீர்புகை வீசியும், தண்ணீரை பீச்சி அடிக்கும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதனால் கொல்கத்தா நகரின் முக்கிய சாலைகள் வன்முறைக்களமாக காட்சியளித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா முக்கிய தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அக்காளி பாலம் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகள் மூடப்பட்டுள்ளன.