புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞரை அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியைச் துப்பு ராயப்பேட்டை சேர்ந்த மணிகண்டன் நரசிங்கன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திப்பு ராயப்பேட்டையைச் சேர்ந்த திப்ளான் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த திப்ளான் பெயிண்டராக வேலை செய்து வந்தார் இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதிக்கு திப்ளான் தனது நண்பர்களுடன் சென்றார். அங்கு திப்ளானை கடுமையாக தாக்கிய அவர்களது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திப்ளான் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள அரியாங்குப்பம் போலீசார் தலைமறைவான கௌசிக் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஏற்கனவே திப்லானுடன் இரட்டை கொலை வழக்கில் கைதானவர்களாவர் தங்களது எதிர் கோஷ்டியுடன் திப்ளான் நெருக்கமாக தொடங்கியதால் ஆத்திரத்தில் கொலை செய்திருப்பார்கள் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.