திருமணமான ஒன்பது மாதத்தில் வாலிபர் ஒருவர் பூட்டிய ஓட்டலுக்குள் குதித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாசூரில் இருந்து சோழசிராமணி செல்லுகின்ற சாலையில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது.அதற்கு அருகில் தனியாருக்கு சொந்தமான உணவகம் 6 மாதங்களாக பூட்டிய நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் ஹோட்டலுக்குள் புகுந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மலையம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கந்தம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் 26 வயதுடைய ஜீவானந்தம் என்பது தெரியவந்தது. அவர் திருச்செங்கோட்டில் இருக்கின்ற ஒரு பெயின்ட் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர் ரேணுகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஜீவானந்தம் பாசூர் வந்து பூட்டப்பட்ட ஹோட்டலின் பின்பகுதி வழியாக உள்ளே சென்று ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று காரணம் தெரியவில்லை. இதுபற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.