மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. இன்று உங்களின் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் மறைமுகமான எதிர்ப்புகள் காணப்படும்.
உரையாடும் பொழுது பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. இன்று உங்களின் பணிகளில் தவறுகள் நேரலாம். உங்களின் சக பணியாளர்களின் தொல்லை காணப்படும். கவனக்குறைவு காரணமாக இன்று சில நல்ல வாய்ப்புகளையும் இழப்பீர்கள். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு காணப்படுவீர்கள். இதனை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். மகிழ்ச்சியை தக்கவைக்க இதனை தவிர்த்துவிடுவது நல்லது. இன்று உங்களின் நிதி நிலைமை மிகவும் மோசமாக காணப்படும். இன்று உங்களின் தேவைகள் அதிகரிக்கும். செலவினங்களை எதிர்க்கொள்வதை கடினமாக உணர்வீர்கள். இன்று செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகலாம். முறையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லப்பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.