மட்டன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:
மட்டன் – ஒரு கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 5
முழு பூண்டு – ஒன்று
மிளகு தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
முந்திரி – பத்து
செய்முறை:
முதலில் மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை சிறிது எண்ணெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு குக்கரில் மட்டன் ஒரு கிலோ, 2 நறுக்கிய வெங்காயம், 2 தக்காளி, மிளகாய்த்தூள் 1 1/2 டீஸ்பூன், இஞ்சிப்பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் 1 1/2 டீஸ்பூன் உப்பு(தேவைக்கேற்ப), தண்ணீர் 1 கப் ஊற்றி, 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்புஅரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 5, மிளகாய் தூள்அரை டீஸ்பூன், கருவேப்பிலை,பின்பு வேகவைத்த மட்டன் குழம்பை சேர்த்து வதக்கவும். மட்டன் நன்கு வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, மிளகுத் தூள் ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரியை சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வேக வைத்து இறக்கவும்,சுவையான செட்டிநாடு மட்டன் சுக்கா தயார்.