திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மது போதையில் கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடுமலைப்பேட்டை அடுத்த பெரிய வாளவாடி சேர்ந்தவர் பிரகாஷ், இவர் சின்ன வாளவாடி சந்தை அருகே உள்ள கடைவீதிக்கு சென்ற போது மதுபோதையில் அங்கு வந்த தனியார் பேருந்து நடத்துனர் பழனிச்சாமி என்பவர் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி பிரகாசை கல்லால் தாக்கியும் கத்தியால் சரமாரியாகவும் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிரகாசை உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சின்ன வாளவாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனிச்சாமி மீது ஏற்கனவே ரேசன் அரிசி கடத்தலுக்கு துணைபோனது, கிராம உதவியாளர் தாக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.