கொரோனா வைரஸ் தொற்று கடவுளிடமிருந்து தமக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுயிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்ற நிலையில் திங்களன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பிவிட அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் டிசியில் செய்தியாளர்களிடம் பேசினார். மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இராணுவ மருத்துவமனைக்கு சென்றதாக குறிப்பிட்ட அவர் வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்தி தாம் விரும்பியதாக கூறினார்.கொரோனா வைரஸ் பாதிப்பு கடவுளிடமிருந்து தமக்கு கிடைத்த ஓர் ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டு செய்தியாளர்களை அதிரவைத்தார் அதிபர் டிரம்ப்.
இந்த முறையும் பேட்டியின்போது அதிபர் ட்ரம்ப் முகக்கவசம் அணியாததும் விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் அதிபராக பதவி வகிப்பதற்கு தகுதி இல்லாதவர் டிரம்ப் என்று விமர்சித்து இருக்கின்றனர். கொரோனா தொற்று குறித்து தவறான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து கூறிவரும் டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.