Categories
தேசிய செய்திகள்

என் குழந்தையை பார்க்கணும்… 500 ரூபாய் லஞ்சம் கொடு… நர்ஸை காட்டி கொடுத்த நபர்…!!!

பெங்களூரு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு குழந்தையின் தந்தையிடம் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய செவிலியரை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.அதனால் லஞ்சம் வாங்கும் செவிலியர்களை பிடிப்பதற்கு ஊழல் தடுப்பு படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு வடக்கு தாலுகாவை சேர்ந்த ஒரு நபரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் மல்லேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

தன் குழந்தையைப் பார்க்க குழந்தையின் தந்தை முயற்சி செய்துள்ளார். ஆனால் மருத்துவமனை செவிலியராக பணியாற்றி கொண்டிருக்கும் கோகிலா என்பவர், அவரை குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை. தனக்கு 700 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் குழந்தையை பார்ப்பதற்கு அனுமதிப்பதாக அவர் அவர் கூறியுள்ளார்.தன் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் குழந்தையின் தந்தை 500 ரூபாய் லஞ்சம் தருவதாக அந்த செவிலியரிடம் கூறியுள்ளார்.

இருந்தாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மருத்துவமனைக்கு ரகசியமாக வந்த போலீசார்,அந்த நபர் செவிலியருக்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுப்பதை மறைந்திருந்து பார்த்துள்ளனர். அதன்பிறகு செவிலியர் கோகிலாவை கையும் களவுமாக பிடித்த ஊழல் தடுப்பு படை போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கோகிலாவிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |