Categories
தேசிய செய்திகள்

10 வயது மகன் முன்னிலையில்… தாய்க்கு நடந்த கொடூரம்…. 4 பேர் கைது…!!

தனியாக இருந்த பெண்ணை 10 வயது மகன் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்திலுள்ள போபாலில் 36 வயதுடைய விதவைப் பெண் ஒருவர் தனது பத்து வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனை அறிந்த அதே ஊரை சேர்ந்த 6 இளைஞர்கள் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் பெண்ணின் கைகளை  கயிற்றால் கட்டிப்போட்டு அவரது 10 வயது மகன் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதனால் சுயநினைவு இழந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து பத்து வயது சிறுவனிடம் விசாரிக்க தொடங்கினார். 6 குற்றவாளிகளில் 4 பேரை கைது செய்த காவல்துறையினர் மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |