காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெற்றோரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கலபுரகியை சேர்ந்த மகேஷ் சுபாஷ் ரத்தோட் என்ற இளைஞர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பிய இளைஞர் சிறுமியின் தந்தையிடம் சென்று தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தந்தை மறுப்பு தெரிவித்ததோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த மகேஷ் தனது நண்பர்களான டோப்பு , சந்தோஷ், இயேசு ஹெமலா ரத்தோட் , ரவி சவான் ஆகியோர்களுடன் சேர்ந்து தான் காதலித்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுமியின் தந்தையிடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் இப்போதே அவரது மகளை தனக்கு நிச்சயம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட சண்டையில் மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியின் தாய் மற்றும் தந்தையை வெட்டிக் கொலை செய்தனர். மகேஷ் காதலிக்கும் சிறுமியின் தங்கையை அவரது நண்பர் காதலிப்பதால் அவரும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மகேஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.